டிசம்பர் 10, அமெரிக்கா: அமெரிக்காவில் உள்ள நியூயார்க்கில் (New York, Ameica), ஜியார்ஜியாவை சேர்ந்த 32 வயது ஜேம்ஸ் ஜாங் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2012ம் ஆண்டில் டார்க் வெப் என்ற மோசடி சமூகவலைதளபக்கம் மூலமாக 3.36 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2,75,55,20,88,000) மதிப்புள்ள சுமார் 50,676 பிட்காயினை பெற்றுள்ளார்.
இணையவழியில் மோசடி செய்த பிட்காயின்களை சட்டவிரோத சந்தைகளில் நாணயங்களாக பெற்று, அதனை தனது வீட்டில் உள்ள பாப்கார்ன் டின்னின் அடிப்பகுதியில் பதுக்கி வைத்துள்ளார். இந்த பிட்காயின்களை வைத்து சிறுசிறுக செலவு செய்து வந்துள்ளார். இதற்கிடையில், ஜேம்ஸ் ஜாங் மீது அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. Cars 2023: அடேங்கப்பா.. அட்டகாசமாக அடுத்தடுத்து களமிறங்கும் கார்கள் என்னென்ன தெரியுமா?.. அசத்தல் தகவல் இதோ.!
இதனையடுத்து, சம்பவத்தன்று அவரது வீட்டில் சோதனை செய்த அதிகாரிகள், அவரால் மறைத்து வைக்கப்பட்ட பிட்காயின்களை கைப்பற்றினர். கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் கைது செய்யப்பட்ட ஜேம்ஸ் ஜாங்கிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையின் போது உண்மையை ஒப்புக்கொண்டார்.
அமெரிக்கா போன்ற பல நாடுகளில் பிட்காயின்கள் போதைப்பொருள் விற்பனையாளர்களால் பரவலாக உபயோகம் செய்யப்பட்டு வந்துள்ளன. அப்போது, டார்க் வெப் இணையத்தின் மூலமாக ஜேம்ஸ் தனக்கு தேவையான பிட்காயின்களை திருடி தற்போது சிறைக்குள் சிக்கிக்கொண்டார். அவருக்கு 20 ஆண்டுகள் சிறை வாழ்க்கை கிடைக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.