மே 31, மேரிலேண்ட் (World News): அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க அளவிலான தேசிய ஸ்பெல்லிங் பீ சாம்பியன் (Scripps National Spelling Bee) நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இந்திய - அமெரிக்க மாணவர் புருஹத் சோமா (வயது 12) என்ற ஏழாம் வகுப்பு மாணவர், 2024ம் ஆண்டுக்கான ஸ்பெல்லிங் பீ கோப்பையை வென்று 50,000 அமெரிக்க டாலர் (ரூ.41,66,100) பரிசை தனதாக்கினார். 12 வயதாகும் பிருஹத், டைபிரேக்கர் ரவுண்டில் 29 வார்த்தைகளை உச்சரித்து, எதிர் போட்டியாளர்களை 9 புள்ளிகள் கணக்கில் தோற்கடித்து வெற்றியை அடைந்தார். அவர் அப்லீஸ் எனப்படும் வார்த்தையை உச்சரித்து வெற்றி அடைந்தார். Manipur Floods: கொட்டித்தீர்த்த கனமழை; வெள்ளத்தில் மூழ்கிய இம்பால் நகரம்., குழந்தையை அண்டாவில் வைத்து மீட்ட அதிகாரிகள்.!
2 ஆண்டுகள் முயற்சிக்கு பின் வெற்றி: தொடக்கத்தில் பிருஹத் சற்று தடுமாறினாலும், பின் அவரின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. உலகளவில் 11 மில்லியன் பார்வையாளர்களை நடப்பு ஆண்டில் எதிர்கொண்ட போட்டியில், இந்திய - அமெரிக்கர் வெற்றி அடைந்துள்ளார். சோமா அமெரிக்க அளவிலான தேசிய ஸ்பெல்லிங் பீ சாம்பியன் பட்டத்தை பெறும் 28 வது இந்திய நபர் ஆவார். இறுதிப்போட்டியில் 7 போட்டியாளர்கள், பிற போட்டிகளில் 228 பேர் என 235 போட்டியாளர்களை அவர் தோற்கடித்து வெற்றியை அடைந்துள்ளார். முந்தைய 2 ஆண்டுகளில் போட்டியிட்ட அவர் வெவ்வேறு கட்டங்களில் ஆட்டங்களை இழந்து தற்போது வெற்றி அடைந்துள்ளார்.
#Speller47 Bruhat Soma from Florida cemented his win by correctly spelling his final word, "abseil." pic.twitter.com/SQtRZZvYHH
— Scripps National Spelling Bee (@ScrippsBee) May 31, 2024