Canada & China National Flag (Photo Credit: Pixabay)

மே 09, கனடா (World News): சீனாவில் (China) வசித்து வரும் உய்கூர் இனத்தை (Uyghur Muslim) சேர்ந்த சிறுபான்மை இஸ்லாமிய மக்கள் தொடர்ந்து பல சிதைவதைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்து இருக்கின்றன. இவை குறித்த குற்றசாட்டுகளை சீன அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்த நிலையில், கனடாவில் (Canada) சீன அரசின் உய்கூர் சமூக மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து கனடா சட்ட ஆலோசகர் சட்டம் இயற்ற தேவையான நடவடிக்கை எடுத்து வந்துள்ளார். MS Dhoni Son of Tamilnadu: “தமிழகத்தின் தத்துப்பிள்ளை மகேந்திர சிங் தோனி” – தமிழ்நாடு முதல்வர் ஏகபோக பாராட்டு..!

அவரை கனடாவில் உள்ள டொராண்டோவில் இருக்கும் சீன அதிகாரி Zhao Wei என்பவர் ரகசியாமக கண்காணித்து வந்ததாக உளவுத்துறை அதிகாரிகள் கனடா அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, எந்த விதமான தயக்கமும் கொள்ளாத கனடா அரசு, சீன அதிகாரியை அங்கிருந்து நாடு கடத்தி சீனாவிற்கே மீண்டும் அனுப்பி வைத்தது. இந்த விசயத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீன அரசு, "கனடா தனது உறவுகளை நாசப்படுத்தியது, உறுதியான எதிர் நடவடிக்கைகள் இருக்கும்" என தெரிவித்துள்ளது.