Turkey Parliament Fight (Photo Credit: @Reuters X)

ஆகஸ்ட் 17, அங்காரா (World News): துருக்கி (Turkey) நாட்டில் பாராளுமன்ற (Parliament Session) கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குறித்து நடந்த விவாதத்தின்போது வாக்குவாதம் முற்றி எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கைகலப்பில் ஈடுபட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது உலகளவில் கவனத்தை பெற்றுள்ளது. அந்நாட்டின் ஆளும் கட்சியான ஏகேபி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஹ்மட் சிகை உரையாற்றும்போது, எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் கைகலப்பில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்பும் மோதிக்கொண்ட நிலையில், பாதுகாவலர்கள் மற்றும் பிற உறுப்பினர்கள் தலையிட்டு அவர்களை அமைதிப்படுத்தினர். கடந்த 2013ம் ஆண்டில் துருக்கி நாட்டில் நடைபெற்ற போராட்டத்தில், அரசை கவிழ்க்க முயற்சித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் அடலே மீது குற்றசாட்டு முன்வைக்கப்பட்டது. இந்த விஷயம் குறித்த விசாரணையில் 2022ம் ஆண்டு 18 ஆண்டுகால சிறைத்தண்டனையும் உத்தரவிடப்பட்டது. Ukraine-Russia War: தீவிரமான ரஷ்யா உக்ரைன் போர்.. ரஷ்யாவின் சில பகுதிகளில் அவசரநிலை பிரகடனம்..! 

பதிலுக்கு பதில் வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது:

அடலே சிறையில் இருந்தாலும், கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் துருக்கி தொழிலாளர் கட்சியை பிரதிநித்துவப்படுத்தி வந்த நிலையில், அதன் வாயிலாக பாராளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டார். பாராளுமன்றத்தில் சிறை தண்டனை குற்றவாளி என அவரின் பொறுப்பு பறிக்கப்பட்ட நிலையில், அரசியலமைப்பு நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அடலேவின் தகுதி நீக்கம் செல்லாது என அறிவிப்பு வெளியிட்டது. இந்த விஷயம் தொடர்பான விவாதத்தில் உங்களின் எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் ஆளுங்கட்சியினரை தீவிரவாதிகள் என அழைக்க, எதிர்கட்சியினரின் பேச்சை மேற்கோளிட்டு பதில் வழங்கிய பாராளுமன்ற உறுப்பினர், "உங்களின் பக்கம் நிற்காத நபர்களை பயங்கரவாதி என அழைப்பதைப்போல, அடலேவை நீங்கள் பயங்கரவாதி என அழைப்பதில் எங்களுக்கு ஆச்சரியம் இல்லை" என தெரிவித்தார்.

இதன் பின்னரே எதிர்க்கட்சி - ஆளுங்கட்சி மோதல் நடந்தது. இந்த சம்பவத்திற்கு பின்னர் சபாநாயகர் 3 மணிநேரம் அவையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். துருக்கி பாராளுமன்றத்தில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகின்றன.