ஏப்ரல் 03, வாஷிங்டன் (World News): சூரியனை நீளவட்ட பாதையில் சுற்றி வரக்கூடிய பனி, பாறை மற்றும் தூசிகளால் ஆன ஒரு விண் பொருள்தான் வால்நட்சத்திரம் ஆகும். இது சூரியனின் உட்புறமண்டலத்தின் அருகில் வரும் போது, சூரியனின் வெப்பத்தால் பனி ஆவியாகி, அதன் கருவை சுற்றி ஒளிரும் தநன்மை கொண்ட வாயு, தூசியால் ஆன வால் போன்ற அமைப்பில் தோன்றுகிறது. இது ஒரு அரிதான நிகழ்வாக, வானியல் அதிசயங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. Construction Worker Murdered Woman:இளம்பெண் கொலை; ஆசைக்கு இணங்க மறுத்ததால் கட்டிட தொழிலாளி வெறிச்செயல்..!
இந்நிலையில், '12 பி பான்ஸ்-புரூக்ஸ்' (Comet 12b Pance-Brooks) என்ற வால்நட்சத்திரம் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை தற்போது சூரியனை சுற்றி நெருங்கி வந்துக்கொண்டிருக்கிறது. சுமார் 30 கிலோ மீட்டர் நீள மையப்பகுதியை உடைய இதனை தொலைநோக்கி மூலமாக, மேற்கு திசை அடிவானத்தில் பார்க்கலாம் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்.
இந்த வால்நட்சத்திரமானது, 1385-ஆம் ஆண்டு சீனாவிலும், 1457-ஆம் ஆண்டு இத்தாலியிலும் தொலைநோக்கியால் பார்த்ததாக சான்றுகள் உள்ளன. மேலும், இந்த வருடம் ஜூன் மாதம் மிக நெருக்கமாக பூமிக்கு அருகில் வரும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு பிறகு, 2095-ஆம் ஆண்டு தான் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.