Congo Mine Disaster Issue (Photo Credit: Twitter)

மார்ச் 29 , காங்கோ குடியரசு (Congo News): ஆப்பிரிக்காவில் (Africa) உள்ள பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப்போர், பயங்கரவாதிகளின் ஆதிக்கம் போன்ற பல காரணத்தால் நிர்வாக ரீதியான பிரச்சனைகளை அந்நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன. காங்கோவை (Congo) பொறுத்தமட்டில் அரசின் அனுமதி இன்றி இயங்கும் சுரங்கங்கள் ஏராளம்.

இவற்றின் மூலமாக தங்கம், வைரம் (Gold & Silver Mines) உட்பட பிற கனிமங்கள் சுரண்டி எடுக்கப்படுகின்றன. இந்நிலையில், காங்கோ நாட்டில் உள்ள முவும்போகோ, லுவோ (Luwowo, Muvumboko) நகருக்கு அருகே அமைந்துள்ள கிராமத்தில் செயல்பட்டு வரும் சுரங்கத்தில், திடீரென மண் சரிவு ஏற்பட்டுள்ளது. Kerala BJP: பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து; கேரளா மாநில பாஜக தலைவர் மீது வழக்குப்பதிவு.!

அப்போது, நிலத்திற்குள் 9 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைபார்த்துக்கொண்டு இருக்க, அவர்கள் அவசர கதியில் அங்கிருந்து வெளியேறி இருக்கின்றனர். அவர்கள் மீட்கப்படும் காட்சியை அங்கிருந்தவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்யவே, அது வைரலாகி வருகிறது.