Donald Trump (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 20, அமெரிக்கா (America): 2020ம் ஆண்டு நடைபெற்று அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முடிவில், அப்போது அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப் (Donald Trump) தோல்வியை தழுவினார். ஜோ பைடன் வெற்றி பெற்றார். இதனை ஏற்காத டிரம்பின் ஆதரவாளர்கள் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து வன்முறையில் ஈடுபட்டு, அங்கிருந்த பொருட்களை சூறையாடினார். இந்த கலவரத்தை டிரம்ப் திட்டமிட்டு தூண்டியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக வழக்கும் நடைபெற்று வந்தது. IND vs SA 2nd ODI: இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி... இந்தியா தோல்வி..!

கொலராடோ உயர்நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு: தலைநகரில் ஏற்பட்ட கலவரம் தொடர்பான வழக்கை கொலராடோ மாநில உச்சநீதிமன்றம் விசாரித்து வந்தது. இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் அவரால் தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.