Rape File pic (Photo Credit: Pixabay)

மார்ச் 05, கெய்ரோ (World News): வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் (Sudan), கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், ராணுவத்திற்கும், துணை ராணுவப்படையான ஆர்.எஸ்.எப்-க்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கடந்த 2024ஆம் ஆண்டு துவக்கத்தில் மோதல் அதிகரித்தது. இதில், 20,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 14 லட்சம் மக்கள், தங்கள் இருப்பிடத்தை விட்டு துரத்திவிடப்பட்டுள்ளனர். Patient Attacks Indian-Origin Nurse: இந்திய வம்சாவளி செவிலியர் கொடூர தாக்குதல்.. நோயாளி வெறிச்செயல்..!

குழந்தைகள் பாலியல் பலாத்காரம்:

இந்நிலையில், 'யுனிசெப்' (UNICEF) எனும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகளின் அவசர கால நிதியம் நேற்று (மார்ச் 04) வெளியிட்ட அறிக்கையில், கடந்த 2024ஆம் ஆண்டுக்குப் பின், ராணுவத்தினர் மற்றும் துணை ராணுவப்படையினரால், பொதுமக்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. மக்களிடம் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக, 221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை (Sexual Assault) செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், 30 சதவீதம் பேர் சிறுவர்கள், 16 வயது முதல் 4 - 5 வயது சிறுவர்களும் அடக்கம். பாலியல் வன்முறைகள், கட்டாய குழந்தை திருமணம் போன்றவற்றால் குழந்தைகள், பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், 61,800 குழந்தைகள், உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.