Haiti Crisis (Photo Credit: @TheInsiderPaper X)

மார்ச் 13, போர்ட்-அவு-பிரின்ஸ் (World News): அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய நட்பு நாடுகளின் உதவியுடன் செயல்பட்டு வரும் ஹைதியில் உள்நாட்டு பிரச்சனை, இருவேறு கும்பலாக பிரிந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபடும் மக்கள் என தொடர் அழிவு சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஹைதி நாட்டில் 49 இலட்சம் மக்கள் ஒவ்வொரு நாளும் உணவுக்காகப் போராடுகின்றனர் என்றும், ஐந்து வயதுக்குட்பட்ட 1,15,000-க்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது UNICEF நிறுவனம்.

ஹைதியில் கூலிப்படையினரால் நாட்டின் ஜனாதிபதி படுகொலை செய்யப்பட்ட பின்னர், கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹென்றி (Ariel Henry) நாட்டின் பிரதமரானார். அதையடுத்து நாடு முழுதும் வன்முறை பெருகியது. இதனால் ஹைதியின் பிரதமர் ஏரியல் ஹென்றி தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். Ravichandran Ashwin: ஐசிசி டெஸ்ட் பவுலர்ஸ் தரவரிசை... மீண்டும் முதலிடம் பிடித்த அஸ்வின்..!

இரத்தவெறி கொண்ட கும்பல்களால் நாட்டைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஹைதியில் இருந்து இடம்பெயர்வுக்கு அங்குள்ள மக்கள் தயாராக இருக்க வேண்டும் என்று NY போஸ்ட் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நாட்டைக் கைப்பற்றிய வன்முறை கும்பல் காரணமாக அண்மைய நாட்களில் சுமார் 15,000 பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர். இதனையடுத்து மியாமியில் உள்ள புளோரிடாவின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.