மார்ச் 13, புதுடெல்லி (New Delhi): இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5ஆவது டெஸ்ட் போட்டி (IND Vs ENG Test Series) தரம்சாலாவில் (Dharamsala) நடைபெற்றது. இந்தப் போட்டியின் மூலமாக தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin) முதல் இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளும், 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளும் கைப்பற்றி அசத்தினார். இதன் மூலம் ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஐசிசி ஆடவர் டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் ( ICC Men’s Test Bowling Rankings) மீண்டும் முதலிடத்தை பிடித்தார். இவர் 2015 டிசம்பரில் முதன்முதலாக நம்பர் ஒன் இடத்தை பிடித்திருந்தார். Vendhaya Kali: வெயில் காலத்தில் உடல் சூடு தணிய வெந்தயக்களி.. சுவையாக செய்வது எப்படி?.!
இதற்கிடையில், தர்மசாலா டெஸ்டில் ஆட்ட நாயகன் விருது பெற்ற குல்தீப் யாதவ் ஆட்டத்தில் ஏழு விக்கெட்டுகளை வீழ்த்திய பின்னர் 15 இடங்கள் முன்னேறி தரவரிசையில் 16-வது இடத்தைப் பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தையும், சுப்மன் கில் 11 இடங்கள் முன்னேறி 20-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.