Imran Khan (Photo Credit: Facebook)

மார்ச் 14, இஸ்லாமாபாத் (World News): பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், பாகிஸ்தான் பொருளாதார நிலைமை மோசமாக உள்ளதாகவும், இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி பாகிஸ்தானுக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அவர், தான் கூறிய கணிப்புகள் கடந்த காலத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. A Fake Preacher Abused Minor Girl: மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்த போலி சாமியார் – 3 பேர் போக்சோ வழக்கில் கைது..!

மேலும், தற்போது பாகிஸ்தான் நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருக்கிறது. சர்வதேச நாணய நிதியாக்கத்திடம் முடிவாக ஒரு கடன் தொகையை கேட்டு பெறவேண்டிய சூழலில் பணவீக்கத்தில் புதிய அலை உருவாகிறது. இலங்கையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த மோசமான பொருளாதார நிலை ஏற்பட்ட போது மக்கள் நீதி கேட்டு போராடி வந்தனர். அதேபோல, தற்போது பாகிஸ்தானிலும் மக்கள் தெருக்களில் இறங்கி போராடிய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். மேலும், பிரதமர் மற்றும் அதிபரை எதிர்த்து போராட்டம் நடத்தும் வாய்ப்பும் உருவாகும் என இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.