ஆகஸ்ட் 22, கொழும்பு (World News): இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே (வயது 76), நிதி முறைகேடு குற்றச்சாட்டில் இன்று (ஆகஸ்ட் 22) காலை கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ஊழல் மற்றும் மோசமான நிர்வாகம் தொடர்பாக, நடந்த போராட்டங்களைத் தொடர்ந்து, அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவி விலகினார். மோசமான அரசியல் காலக்கட்டத்தில், 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரணில் விக்ரமசிங்கே (Ex-President Ranil Wickremesinghe) இலங்கையின் அதிபராக பதவியேற்றார். Earthquake: தென் அமெரிக்காவில் அதிபயங்கர நிலநடுக்கம்.. அச்சத்தில் மக்கள்.!
ரணில் விக்கிரமசிங்கே மீதான குற்றச்சாட்டு:
நாட்டின் மிக மோசமான நிதி நெருக்கடிக்கு மத்தியில், பொருளாதாரத்தை நிலைப்படுத்தி மறுசீரமைத்தார். இதன்பின்னர், செப்டம்பரில் நடைபெற்ற மறுதேர்தலில் அவர் தோல்வியை சந்தித்தார். கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், அவர் அதிபராக பதவி வகித்த காலத்தில் பிரிட்டிஷ் வால்வர்ஹாம்டன் பல்கலைக்கழகத்தில், தனது மனைவி மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள இங்கிலாந்துக்கு சென்றார். அப்போது, அரசாங்க பொது நிதியைப் பயன்படுத்தியதாக சிஐடி (CID) குற்றம் சாட்டியது.
ரணில் விக்ரமசிங்கே கைது:
இதுகுறித்த விசாரணையில், ரணில் விக்ரமசிங்கே தனது மனைவியின் பயணச் செலவுகளை அவரே ஏற்றுக்கொண்டதாகவும், அரசு நிதி எதுவும் பயன்படுத்தப்படவில்லை எனவும் கூறினார். ஆனால், இங்கிலாந்துக்குச் செல்ல அரசாங்க பொது நிதியைப் பயன்படுத்தியதாக இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே இன்று செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து, அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.