டிசம்பர் 30, வாஷிங்டன் (World News): அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் (Former US President Jimmy Carter) காலமானார். 100 வயதான அவர் வயது முதிர்வு காரணமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று (டிசம்பர் 29) அவர் மரணமடைந்தார். ஜிம்மி கார்டர், அமெரிக்காவின் 39வது அதிபராக 1977ஆம் ஆண்டு முதல் 1981ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்துள்ளார். South Korea Flight Crash: தென்கொரியாவில் பயங்கர விமான விபத்து; 68 பேர் பலி., 132 பேர் கவலைக்கிடம்..!
அமெரிக்க முன்னாள் அதிபர் மரணம்:
அமெரிக்க அதிபராக அவரது பதவிக்காலம் முடிந்தபிறகு, அமைதிக்கான நோபல் பரிசை (Nobel Peace Prize) பெற்றார். ஜிம்மி கார்டர் மரணம் குறித்து சிகிச்சை மையம் வெளியிட்ட அறிக்கையில், 'பிளெய்ன்ஸ் நகரில் உள்ள வீட்டில், ஜிம்மி கார்டர் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்தனர்' என்று தெரிவித்துள்ளது. முன்னாள் அதிபர் மறைவை ஒட்டி, அமெரிக்கா வெள்ளை மாளிகையில் தேசியக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளன. ஜிம்மி கார்டர், அமெரிக்க வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த முன்னாள் அதிபர் என்ற பெருமையைப் பெற்றார்.