South Korea | Muan International Airport Flight Crash (Photo Credit: @NDTVIndia X)

டிசம்பர் 29, மவுன் (World News): தாய்லாந்து நாட்டில் உள்ள பேங்காக் (Bangkok) நகரில் இருந்து, தென்கொரியாவில் (South Korea) உள்ள மவுன் (Muan International Airport) விமான நிலையத்திற்கு, 181 பயணிகள் மற்றும் விமான குழுவினருடன் ஜேஜூ ஏர் 2216 (Jeju Air) நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் பயணம் செய்தது. இந்த விமானம் மவுன் விமான நிலையத்திற்கு வந்தபோது, தரையிறங்கும் அமைப்பு சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் விமானம் ஓடுபாதையில் தரையிறங்கி அதிவேகத்தில் இழுத்து செல்லப்பட்டு விபத்தில் சிக்கியது. Heavy Snowfall: கடும் பனிப்பொழிவு; சிக்கி தவித்த 5 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் பத்திரமாக மீட்பு..! 

132 பேரின் நிலை தெரியாததால் பலி எண்ணிக்கை உயரும் அச்சம்:

இந்த விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 181 பேரில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 2 பேர் மட்டுமே காயமின்றி தப்பி இருக்கின்றனர். எஞ்சிய 132 பேரின் நிலைமை தெரியவில்லை. 2 பேர் மட்டுமே அதிஸ்டவசத்துடன் தப்பியதாக தகவல் வெளியாகியள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர், நிகழ்விடத்திற்கு விரைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். போயிங் நிறுவனத்தின் 737-800 ரக விமானம் விபத்தில் சிக்கி இருக்கிறது. இந்த சம்பவத்தில் விமானத்தின் தரையிறங்கும் அமைப்பில் பறவை ஏதேனும் சிக்கி விமானம் விபத்தில் சிக்கி இருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது. விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

181 பயணிகளுடன் பயணித்த விமானம் விபத்தில் சிக்கிய பதறவைக்கும் காட்சிகள்:

பேங்காக் நகரில் இருந்து பயணம் செய்த விமானம் விபத்திற்குள்ளான காட்சிகள்: