செப்டம்பர் 21, ஒட்டாவா (World News): பஞ்சாப் (Punjab) மாநிலத்தைச் சேர்ந்த ரவுடி சுகா துனேக் (Sukha Duneke) கனடாவில் (Canada) வின்னிப்பெக் (Winnipeg) நகரத்தில் இரு பயங்கரவாத கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவர் தேசிய புலனாய்வு துறையால் (National Investigation Agency) தேடப்பட்டு வரும் 48 முக்கிய குற்றவாளிகளில் ஒருவர். இவர் மீது ஏற்கனவே ஏழு கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருக்கிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு இவர் கனடாவிற்கு போலி ஆவணங்களை வைத்து தப்பிச்சென்றிருக்கிறார். MSD Celebrate Vinayagar Chathurthi: மும்பையில் விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி மகிழ்ந்த தோனி..! வைரல் வீடியோ உள்ளே.!

இந்தியாவில் தண்டனைகளில் இருந்து தப்பிக்க, பல கிரிமினல் குற்றவாளிகள் கனடாவில் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். பஞ்சாப் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து கிட்டத்தட்ட 29 குண்டர் குற்றவாளிகள் கனடாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிகிறது. இவர்கள் அனைவரும் போலி பாஸ்போர்ட் அல்லது நேபால் வழியாக கனடாவிற்கு தப்பித்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

கடந்த ஜூன் மாதம் கனடாவில் ஏற்பட்ட இதே போன்ற ஒரு மோதலில் தான்  இந்தியாவின் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜார் (Hardeep Singh Nijjar) கொல்லப்பட்டார். அவரும் இந்திய புலனாய்வுத்துறையால் தேடப்பட்டு வரும் முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.