Ismail Haniyeh (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 14, இஸ்ரேல் (Israel): இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர் 7ஆம் தேதி வான்வழி தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் காசா மீது தொடர்ச்சியாக வான்வழி மற்றும் தரைவழி தாக்குதலில் ஈடுபட்டது. தற்போது இந்த போரானது தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்தத் தாக்குதலால் ஏராளமான மக்கள் அகதிகளாக காசாவில் (Gaza) இருந்து வெளியேறி வருகின்றனர். மேலும் காசாவில் மட்டும் இதுவரை 18,400-க்கும் அதிகமானோர் உயிர் இழந்துள்ளனர். இந்தப் போரில் பல கட்டடங்கள் தரை மட்டம் ஆகி உள்ளன. Royal Enfield Shotgun 650: ராயல் என்ஃபீல்டு ஷாட்கன் 650 வெளியீடு... எவ்வளவு விலை தெரியுமா?..!

பேச்சுவார்த்தைக்கு தயார்: இந்நிலையில் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு ஹமாஸ் அமைப்பை சேர்ந்த முக்கிய தலைவர் இஸ்மாயில் ஹனியே பேட்டி அளித்துள்ளார். அதில் பாலஸ்தீனிய எல்லை ஆக்கிரமிப்பு மற்றும் அங்குள்ள ஆக்கிரமிப்பாளர்களை முழுதாக அகற்றுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு, நாங்கள் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வரக்கூடிய எந்த ஒரு பேச்சு வார்த்தைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.