நவம்பர் 15, சாவ் பாலோ (World News): பிரேசில் நாட்டில் உச்ச நீதிமன்ற (Brazilian Supreme Court) வளாகத்தில் நேற்று முன்தினம் (நவம்பர் 13) மாலை இரண்டு மிகப்பெரிய குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தது. இதில், ஒருவர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்ற அமர்வுகள் முடிந்ததும் நீதிபதிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், அன்று இரவு 7.30 மணியளவில் இரண்டு குண்டுவெடிப்புக்கள் நிகழ்ந்தது. முதலில் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த காரில் குண்டு வெடித்தது. Sri Lanka Parliamentary Elections 2024: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2024.. பெரும்பான்மையான இடங்களில் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி.!
இதன் பின்னர், பிரான்சிஸ்கோ வாண்டர்லி லூயிஸ் (வயது 59) என்ற மனித வெடிகுண்டு நபர் (Bomb Attack) உச்சநீதிமன்றத்துக்குள் நுழைய முயன்றுள்ளார். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவரை உள்ளே செல்ல மறுத்து, அவரிடம் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், அந்த நபர் குண்டுகளை வெடிக்க செய்ததாக தெரிகிறது. இதில் அந்த நபர் உடல் சிதறி பலியானார். இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் (Rio de Janeiro) அடுத்த வாரம் ஜி20 மாநாடு (G20 Summit) நடைபெறவிருக்கும் நிலையில், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிரேசிலில் மனித வெடிகுண்டு தாக்குதல்:
🧿: A video depicts the incident in which a suicide bomber detonates explosives in proximity to the Supreme Federal Court (STF) building. Francisco Wanderley Luiz threw an explosive device at the statue, but the device did not detonate. Luiz then attempted to place another… pic.twitter.com/yMO7hB6yXJ
— Afridi! (@AakashAfridi3) November 14, 2024