நவம்பர் 15, கொழும்பு (World News): கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு ஏற்பட்டது. அதற்கு பொறுப்பேற்று, கோத்தபய ராஜபட்ச அதிபர் பதவியில் இருந்து விலகினார். இதனையடுத்து புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார். பின்னர் கடந்த செப்டம்பர் 21-ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
அதில், தேசிய மக்கள் சக்தி (National People's Power Party) கூட்டணி சார்பில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க வெற்றி பெற்று அதிபரானார். அனுராவின் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு 3 எம்.பிக்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய சட்டங்களை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் வேண்டும் என்பதால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தல் நடத்த உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, புதிய நாடாளுமன்றத்தை தேர்வு செய்வதற்கான தேர்தல் (Sri Lanka Parliamentary Elections) நவம்பர் 14-ம் தேதி நடைபெற்றது. New Zealand Parliament: மவோரி மக்களுக்கு எதிரான சட்டம்.. நாடாளுமன்றத்தில் பழங்குடியின பெண் எம்.பி. நடனம் ஆடி எதிர்ப்பு..!
தொடர்ந்து, நேற்று மாலை சுமார் 4 மணியளவில் வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. தற்போது முன்னிலை நிலவரங்கள் வெளியாக தொடங்கியுள்ளன. இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் 196 இடங்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் 141 இடங்களை தேசிய மக்கள் சக்தி அணியும் ஐக்கிய மக்கள் சக்தி அணி 35 இடங்களையும் இலங்கை தமிழரசுக் கட்சி 7 இடங்களையும் கைப்பற்றி உள்ளன. இதில், பெரும்பான்மை இடங்களை தேசிய மக்கள் சக்தி பிடிக்கும் என்றே தெரிகிறது.