ஜூன் 21, ஹஜ் (World News): ஹஜ் புனித பயணம் என்பது ஒவ்வொரு இஸ்லாமியரின் கடமையாக இருக்கிறது. வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் பயணம் மேற்கொண்டு விட வேண்டும் என்று இஸ்லாமியர்கள் குறிக்கோள் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் ஹஜ் புனித யாத்திரையில் உலகம் முழுவதும் இருந்து 18 லட்சம் இஸ்லாமியர்கள் (Haj Pilgrims) பங்கெடுத்திருக்கிறார்கள். Bike Trip With Mom: "எத்தனை நாளைக்கு தான் டா.. லவர்க்கே ஊர சுத்திக் காட்டுவீங்க.." அம்மாவுடன் பைக்கில் கிளம்பிய வாலிபர்..!
இந்த நிலையில் சவுதி அரேபியாவில் கடும் வெயில் மற்றும் வெப்ப அலை வீசி வருகிறது. அதுவும் கடந்த 17ம் தேதி சவுதியில் 51.8 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெயில் பதிவாகியிருந்தது. இதனால் வெயிலின் தாக்கத்தால் 19 பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 1000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இதில் 68 பேர் இந்தியர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 17 பேரை காணவில்லை. இருப்பினும் யாத்திரிகளின் வருகை குறையவில்லை.