nubia Pad 3D II (Photo Credit: @backiya28 X)

மார்ச் 1, புதுடெல்லி (New Delhi): உலகளவில் எப்போதுமே 3D திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 3டி சாதனங்களும் அதிகமாக ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நுபியா நிறுவனம் 3D டிஸ்பிளேவை ஆதரிக்கும் nubia Pad 3D டேப்லெட் சாதனத்தை அறிமுகம் செய்தது. Millet Curd Rice: ருசியான சாமை தயிர் சாதம்... செய்வது எப்படி?.!

சிறப்பம்சங்கள்: புதிய நுபியா பேட் 3D II (nubia Pad 3D II) சாதனம் உலகின் முதல் 5G + AI அம்சம் கொண்ட கிளாஸ் ஃபிரீ 3D டிஸ்பிளே சாதனமாக வெளிவந்துள்ளது. இந்த டேப்லெட் மாடல் 5G இணைப்புடன் வெளிவந்துள்ளது. இது AI அம்சத்துடனும் செயல்படுகிறது. இந்த சாதனம் 12.1" இன்ச் அளவு கொண்ட IPS LCD உடன் 2,560 x 1,600 பிக்சல் கொண்ட 144Hz ரெஃப்ரஷ் ரேட் கிரிஸ்டல் லென்ஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது LPDDR5X ரேம் மற்றும் 512GB UFS 4.0 ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 13MP டூயல் ரியர் கேமராவுடன், முன்பக்கத்தில் டூயல் 8MP கேமராவை கொண்டுள்ளது. இது 10,000mAh பேட்டரி உடன் 66W பாஸ்ட் சார்ஜ்ஜிங்கை ஆதரிக்கிறது.