டிசம்பர் 18, டெல் அவிவ் (World News): கடந்த அக்.07ம் தேதி தொடங்கிய இஸ்ரேல் - பாலஸ்தீனிய போர், 2 மாதங்களை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. சில நாட்கள் இருதரப்பிலும் பிணையக்கைதிகளை பரிமாறிக்கொள்ள தற்காலிகமாக போர் நிறுத்தம் செய்யப்பட்டது. தற்போது மீண்டும் இஸ்ரேலின் தரப்பில் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்கு உதவும் அமெரிக்கா: ஹமாஸ் அமைப்பினரும் தொடர்ந்து இஸ்ரேலிய இராணுவத்தை எதிர்த்து போராடி வருகின்றனர். படைபலம் குறைந்த ஹமாஸ், வெளிநாட்டு கூட்டாளிகளை நம்பி போரில் களமிறங்கி, அவர்கள் பாதுகாக்க வேண்டிய மக்களின் நிலையை கேள்விக்குறியாக்கிவிட்டனர். இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி வருவதால், இஸ்ரேலின் தரப்பில் தாக்குதல் முன்னெடுக்கப்படுகிறது. Modi Government Covid Advisory: மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா: மாநில அரசுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்.!
போரை நிறுத்த தீர்மானம்: இஸ்ரேல் - ஹமாஸ் போரை நிறுத்த ஐ.நா மன்றத்தில் வாக்கெடுப்பின் மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அது சார்ந்த பேச்சுவார்த்தையில் இறங்க நடவெடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காசாவில் (Jabiliya Airstrike) மீண்டும் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலில் 100 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மீண்டும் வான்வழி தாக்குதல்: வடக்கு காசாவில் உள்ள ஜெபலியா மாகாணத்தில் நடந்த வான்வழி தாக்குதலில் சிக்கி, அப்பாவி பெண்கள், குழந்தைகள் உட்பட 110 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 100 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாலஸ்தீனிய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கூற்றுப்படி, ஜெபலியா அகதிகள் முகாமில் இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தெரிவித்துள்ளது.
தொடரும் தாக்குதல், உயரும் மரணங்கள் எண்ணிக்கை: தற்போது வரை இப்போரின் காரணமாக காசாவில் உள்ள 19 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் தரப்பில் 1400 பேர் கொடூரமாக தலைகள் உடலில் இருந்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.