மார்ச் 17, பெனின்சுலா (World News): ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெனின்சுலா (Iceland Volcano Eruption) தீவுகளுக்கு அருகே, அமைதியாக உறங்கிக்கொண்டு இருந்த எரிமலை ஒன்று இருந்தது. இந்நிலையில், இந்த எரிமலை இன்று தனது அக்னி குழம்புகளை வெளியேற்றி வெடித்து சிதறி வருகிறது. இதனால் பாதுகாப்பு நடவடிக்கையாக அங்குள்ள கிண்டர்விக் நகரில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
டிசம்பரில் தொடங்கியது இன்னும் அணையவில்லை: நரகத்தின் வாயில் போல தோன்றும் எரிமலை, தொடர்ந்து வெடித்து சிதறி வரும் காரணத்தால் அங்குள்ள மக்கள் அச்சத்திற்கும் உள்ளாகியுள்ளனர். மேலும், வான்வழியில் கரும்புகை அதிகம் இல்லை என்பதால், அவ்வழித்தடத்தில் விமானங்கள் இயக்க தற்போதைய நிலையில் தடை ஏதும் விதிக்கவில்லை. கடந்த டிசம்பர் 08ம் தேதி தொடங்கிய எரிமலை வெடிப்பு, படிப்படியாக அதிகரித்து கடல் போல எரிமலை குழம்புகள் காட்சி அளிக்கின்றன. Virat Arrived India: போடுடா வெடிய... 'இ சாலா கப் நம்தே' - தாயகம் திரும்பிய விராட் கோலி.. விரைவில் ஆர்.சி.பி அணியுடன் இணைவு.!
வரலாற்றில் புதிய மைல்: பெனின்சுலாவில் இருக்கும் கெஃப்லாவிக் சர்வதேச விமான நிலையம் எரிமலை வெடிப்பு காரணமாக எவ்வித பாதிப்பையும் சந்திக்கவில்லை. இதனால் விமான போக்குவரத்து தொடர்ந்து நடைபெறுகிறது. உள்நாட்டு அளவிலான விமான போக்குவரத்தும் எவ்வித பிரச்சனையும் இன்றி நடைபெறுகின்றன. நிகழ்விடத்தை வான்வழியாக ஆய்வு செய்த புவி இயற்பியலாளர் மேக்னஸ் டுமி குட்மண்ட்சன், வரலாற்றில் இல்லாத அளவு சக்திவாய்ந்த வகையில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது, அது மேற்கு-தெற்கு நோக்கி நகருகிறது எனவும் குறிப்பிட்டார்.
BREAKING: Volcano erupts for fourth time on Iceland peninsula pic.twitter.com/ZSJ6ePVCaf
— Insider Paper (@TheInsiderPaper) March 16, 2024