மே 06, கைபர் பக்துன்க்வா (World News): பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணம், பிஸ்ஷாம் தாலுகா, தண்டை காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆறு ஒன்று செல்கிறது. சம்பவத்தன்று அங்குள்ள பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர், ஆற்றங்கரைக்கு தனியாக சென்றுள்ளார். அங்கு மூவர் கும்பல் ஒன்று இளைஞரை வழிமறித்து இருக்கிறது. கத்தி முனையில் இளைஞரை மிரட்டிய கும்பல், அவரை நிர்வாணப்படுத்தி வீடியோ எடுத்துள்ளது.
புகாரை ஏற்றுக்கொண்ட அதிகாரிகள்: மேலும், அவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயற்சியும் செய்துள்ளது. இதனால் பதறிப்போன இளைஞர், அங்கிருந்து தப்பி வந்திருக்கிறார். பின் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, தண்டை காவல் நிலைய அதிகாரிகள் 377 பிரிவு இயற்கைக்கு மாறான குற்றம், 511 பிரிவு குற்றச்செயல்களில் ஈடுபடுதல் மற்றும் கொலை முயற்சி செய்தல், 506/34 குற்றச்செயல் ஆகியவற்றின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். CISCE ISC Exam Results 2024: சிஐஎஸ்சிஇ பாடத்திட்டத்தில் படித்த 10, 12 ம் வகுப்பு மாணவர்களான தேர்வு முடிவுகள் அறிவிப்பு.. விபரம் உள்ளே.!
தொடரும் பிரச்சனைகள்: ஏற்கனவே உள்நாட்டு பிரச்சனை, பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவின் பொருளாதார தடை, பயங்கரவாத தாக்குதல் உட்பட பல்வேறு துயரங்களால் பாகிஸ்தான் நாடு அவதிப்பட்டு வருகிறது. அந்நாட்டு மக்களின் பாதுகாப்பும், சட்டம் ஒழுங்கும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்நிலையில், ஆற்றங்கரையின் அழகை காண தனியே சென்ற கல்லூரி மாணவருக்கு நேர்ந்த துயரம் குறித்த செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.