Stray Dog (Photo Credit: @TOIHyderabad)

மார்ச் 15, மாஸ்கோ (World News): ரஷ்யா நாட்டில் உள்ள சேவர்ஸ்க் (Seversk) நகரில், திருமணமான தம்பதிகள் வசித்து வருகிறார்கள். இந்த தம்பதிகள் கடந்த 8 ஆண்டுகளாக வீட்டில் நாய் ஒன்றையும் வளர்த்து வந்துள்ளனர். சமீபத்தில் தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. ஒரு மாதமேயாகும் கைக்குழந்தையுடன் தம்பதி வசித்து வந்துள்ளனர். இதனிடையே, தம்பதியின் வீட்டில் இருக்கும் நாய், பெரும்பாலான சமயங்களில் மூர்கத்தனத்துடன் காணப்படும் என கூறப்படுகிறது. Putin Thanks to PM Modi: உக்ரைன் - ரஷ்யா போர் அமைதி பேச்சுவார்த்தை; பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புதின் நன்றி.! 

கால்நடை மருத்துவர்கள் மறுப்பு:

இந்நிலையில், சம்பவத்தன்று கட்டிலில் இருந்த குழந்தையை நாய் கடித்துகுதறியது. குழந்தையின் தொண்டையில் கடித்து ஏற்படுத்திய காயம் காரணமாக, பச்சிளம் பிஞ்சு பரிதாபமாக உயிரிழந்தது. இதனால் வருத்தம் அடைந்த தம்பதி, நாயை கால்நடை மையத்திற்கு அழைத்துச் சென்று கருணைக்கொலை செய்ய கோரிக்கை வைத்தனர். ஆனால், நாய் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பதால், விதிப்படி தங்களால் அவ்வாறு செய்ய இயலாது என கால்நடை மருத்துவர்கள் மறுத்துவிட்டனர். கடந்த மார்ச் 10, 2025 அன்று குழந்தை உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. குழந்தையை இரவில் உறங்கவைத்துவிட்டு, பெற்றோரும் உறங்கியுள்ளனர். மறுநாள் காலையிலேயே பச்சிளம் பிஞ்சின் மரணம் தெரியவந்தது.

செல்லப்பிராணிகள் வளர்ப்போர் கவனமாக இருக்க வேண்டியதை, மேற்கூறிய சோக சம்பவம் உறுதி செய்துள்ளது.