Seoul Subway fire (Photo Credit : @thinking_panda X)

ஜூன் 28, தென் கொரியா (World News): தென் கொரிய நாட்டை சேர்ந்தவர் வோன் (வயது 67). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ள நிலையில், குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து முடிவை நோக்கி இவர்களது வாழ்க்கை நகர்ந்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்தவர் சமீபகாலமாகவே மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே 31 அன்று ரயில் பயணத்தை மேற்கொண்டவர், ஹான் நதிக்கு கீழே சுரங்கப்பாதை வழியே சென்ற ரயிலுக்கு தீ வைத்துள்ளார். இதனை சற்றும் உணராத பயணிகள் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கு முக்காடியுள்ளனர்.

பெட்ரோல் ஊற்றி தீ வைத்த அதிர்ச்சி சம்பவம் :

திடீரென இவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் புகை சூழ்ந்து 22 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் 6 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படும் நிலையில், மன உளைச்சலில் இந்த செயலை அவர் செய்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகியதால் கண்டனங்களும் குவிந்து வருகின்றன. மேலும் அவர் விவாகரத்து வழக்கின் முடிவில் எதிர்பார்த்த விஷயம் நடக்கவில்லை என்ற விரக்தியில் 160 க்கும் மேற்பட்ட பயணிகளின் உயிருடன் விளையாடியது மிகவும் கொடூரமானது எனவும் பலர் தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதியவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வீடியோ :