ஏப்ரல் 26, நியூயார்க் (World News): உலக நாடுகள் வானியல் தொடர்பான (Space Research) ஆராய்ச்சியில் ஈடுபட்டதில் இருந்து, வேற்றுகிரகங்கள் மற்றும் அதில் வாழும் உயிரினங்கள் குறித்து பல்லாயிரம் கேள்விகளுடன் மர்மமங்கள் உலா வருகின்றன. ஏலியன்கள் தான் எதிர்கால தொழில்நுட்பத்தை (Alien Technology) பூமிக்கு வழங்கப்போகிறார்கள். அவர்கள் பூமியில் இருப்பது உண்மை என ஒருபுறம் ஒலிக்கும் குரல்கள் சமீபகாலமாக அதிகரித்து இருக்கிறது.
தொடரும் ஏலியன் மர்மங்கள்: அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் உளவுத்துறை மற்றும் வானியல் ஆராய்ச்சி, இராணுவம் ஆகியவற்றில் உயர்பொறுப்பில் பணியாற்றி வரும் நபர்களும் ஏலியன்கள் (Aliens In Earth) குறித்து பல தகவலை பகிர்ந்து வருகின்றனர். ஏலியன்கள் இருப்பது உண்மை, விபத்தில் சிக்கிய ஏலியன் மற்றும் பறக்கும் தட்டு வைத்து அமெரிக்கா ஆய்வு நடத்தி வருகிறது என பல தகவலை அவர்கள் பகிர்ந்தாலும், அரசு தரப்பில் எந்த தகவலும் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை. a Dog Beaten by Man: நாயின் கண்களில் இரும்பு ராடு செலுத்தி கொடூர தாக்குதல்; உயிருக்கு போராடும் நாய்.!
கேமிராவில் பதிவான பறக்கும் தட்டு? அமெரிக்காவுக்கு பின் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் அவ்வப்போது ஏலியன்கள் உளவியதாக சில சர்ச்சைக்குரிய காணொளிகள் (UFO Sights) வெளியாகி வைரலாகின. இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள நெவ்வ்யார்க் பகுதியில், வானில் விமானம் பயந்துகொண்டு இருக்கும்போது பயணி ஒருவர் எதற்ச்சையாக வீடியோ எடுத்துள்ளார். அச்சமயம் மர்ம பொருள் ஒரு நொடிக்கும் குறைவான வேகத்தில் அவரின் கேமிராவை கடந்து சென்றது. இதனைக்கண்டு அதிர்ந்துபோன நபர், தனது வீடியோவை விமான கட்டுப்பாட்டு அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்து, தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவு செய்துள்ளார்.
மர்மப்பொருள் குறித்து தொடரும் விசாரணை: இந்த வீடியோ குறித்து எந்த விதமான அரசுத்துறை சார்ந்த விளக்கமும் கிடைக்கப்பெறவில்லை. வானில் தோன்றும் மர்ம பொருட்கள் குறித்து ஆய்வு செய்து வரும் தாமஸ் வெர்ட்மன், வீடியோ குறித்து ஆய்வு செய்து வருகிறார். அதில் தோன்றியுள்ள பொருளின் விபரம் அவராலும் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் விமானத்தை நொடியில் கடந்து சென்ற பொருள் ஏலியனின் வாகனமா? வேறு ஏதேனும் பொருளா? என்ற மர்மம் இன்று வரை நிலவி வருகிறது. இந்நிகழ்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது குறிப்பிடத்தக்கது.