ஏப்ரல் 28, ஓஹியோ (World News): அமெரிக்காவில் உள்ள ஓஹியோ மாகாணம், கிலீவ்லேண்ட், கார்டன் நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிராங்க் டைசன் (Black Man Frank Tyson). இவர் கறுப்பினத்தவர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கார் விபத்தில் சிக்கிய விவகாரத்தில், விபத்தை ஏற்படுத்திய டைசன் மற்றும் அவரின் கார் நிகழ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர். இந்த விஷயம் தொடர்பாக ஓஹியோ மாகாண காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விவகாரத்தில் பிராங்க் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு, அதிகாரிகள் அவரை கடந்த ஏப்ரல் 19 அன்று கைது செய்தனர்.
கொலை சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசாரணை: பிராங்க் கைது செய்யப்படும்போது, அவரை படுக்கையில் கிடத்தி, பிராங்கின் மீது ஏறி அமர்ந்து காவலர்கள் கைது செய்தனர். 53 வயதுடைய பிராங்க் தனக்கு மூச்சு முட்டுவதாக போராடியும் பலனில்லை. இறுதியில் அவர் மூர்ச்சையாகிவிட, உடனடியாக அவசர ஊர்தி பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். அங்கு நடந்த சோதனையில் பிராங்க் மரணம் அடைந்தது உறுதி செய்யப்பட்டது. பிராங்க் டைசனின் மரணத்திற்கு பின்னர் ஓஹியோவில் பதற்றமான சூழ்நிலை உண்டாகியது. இதனால் உயர்மட்ட விசாரணையும் நடைபெற்றது. Itamar Ben Gvir Car Accident: திடீரென குறுக்கே புகுந்த காரால் விபத்தில் சிக்கிய அரசியல்புள்ளி; சினிமா பாணியில் பதறவைக்கும் காட்சிகள்.!
காவல்துறை இயக்குனரகம் இரங்கல்: இந்நிலையில், தற்போது பிராங்க் டைசன் கைது செய்யப்படும்போது, அவரின் மீது காவலர் அமர்ந்ததும், தன்னால் மூச்சு விடமுடியவில்லை என டைசன் கதறி பின் மயங்கி உயிரிழந்தது குறித்த காட்சிகளும் வெளியாகியுள்ளன. இந்த காட்சிகள் அனைத்தும் காவலர்களின் உடலுடன் பொருத்தப்பட்டுள்ள கேமிராவில் பதிவானை ஆகும். இதனால் தற்போது துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாக ஓஹியோ மாகாண காவல் இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும், டைசன் உயிரிழந்ததற்கு அவர் தனது இரங்கலையும் அவரின் குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார்.
சிறையில் அடைக்கப்பட வாய்ப்புகள் அதிகம்: விசாரணைக்கு சென்ற காவல் அதிகாரிகளான பேயு சோனேஜ் (Beau Schoenegge) மற்றும் கேம்டன் பிரச் (Camden Burch) ஆகியோர் டைசன் கொலையில் முக்கிய குற்றவாளிகளாக கருதப்படும் காவலர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் தற்போது சுய விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான விசாரணையும் நடந்து வருகிறது. காவலர்களுக்கு எதிராக குற்றசாட்டு உறுதியாகும் பட்சத்தில், அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு கொலைக்குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்படுவார்கள். Sam Curran Dismiss Phil Salt: ஒரேயொரு யாக்கர் பால்; சால்ட்டின் கனவை தெறிக்கவிட்ட சாம் கரண்; மெய் சிலிர்க்கவைக்கும் வீடியோ இதோ.!
டைசன் மூர்ச்சையான பின்னர் காவலர்கள் சந்தேகித்து அவரின் உடலை மல்லாக்க கிடத்தினர். அவர் தொடர்ந்து மயக்க நிலையில் இருந்ததால் சிபிஆர் உட்பட முதலுதவி சிகிச்சையும் காவலர்களால் வழங்கப்பட்டது. ஆனால், காலம் கடந்தால் டைசன் மரணமடைந்தார், காவலர்கள் கொலை வழக்கில் சிக்கி இருக்கின்றனர்.
வீடியோ உங்களின் பார்வைக்கு: