ஜூலை 16, ஓமன் (World News): ஓமன் கடலில் நேற்று இரவு திடீரென எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததாகவும் அந்த கப்பலில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர் உட்பட 16 பேர்களை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 'பிரெஸ்டீஜ் பால்கன்’ எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர். Viduthalai Part 2 First Look: "வீரத்தின் விளைநிலமாய், வெற்றியின் பிறப்பிடமாய்.." வெளியான விடுதலை 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..!
நேற்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது. கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், கடலில் எண்ணெய் கசிவு குறித்த எந்த தகவலும் இன்னும் உறுதி செய்யப்படாமல் உள்ளது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்துக்கானது என்பது குறிப்பிடத்தக்கது.