
மார்ச் 04, புளோரிடா (World News): புளோரிடாவில் (Florida) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த செவிலியர் ஒருவர், மனநல நோயாளி ஒருவரால் கொடூரமாக தாக்கப்பட்டார். கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி அன்று பாம்ஸ் வெஸ்ட் மருத்துவமனையில், நோயாளி ஸ்டீபன் ஸ்காண்டில்பரி (வயது 33) என்பவர், 67 வயதான லீலா லாலை கொடூரமான முறையில் (Patient Attacks Nurse) தாக்கினார். இதனையடுத்து, ஸ்காண்டில்பரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாய்வழி உறவால் கர்ப்பம்? மருத்துவர்கள் ஷாக்.. அதிர்ச்சி தகவல்.!
இந்திய வம்சாவளி செவிலியர் படுகாயம்:
ஸ்காண்டில்பரி, பேக்கர் சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒரு மனநல நோயாளி ஆவார். அதாவது, மனநல நெருக்கடிக்குப் பிறகு, அவர் விருப்பமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த விசாரணையில், தாக்குதலுக்கு உள்ளான 67 வயதான லால் தனது பார்வையை இழக்க நேரிடும். அவரது முகத்தில் கிட்டத்தட்ட அனைத்து எலும்புகளும் உடைந்திருந்தன என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து, காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.