
மார்ச் 02, பெடோரியா (World News): தென்னாபிரிக்கா நாட்டில் உள்ள லெசோதோ பகுதியில் 15 வயது சிறுமி வசித்து வருகிறார். சம்பவத்தன்று சிறுமி கடுமையான வயிற்று வலியுடன் மருத்துவமனையில் குடும்பத்தினரால் அனுமதி செய்யப்பட்டார். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது. சிறுமியின் தாய் மகளின் நடவடிக்கையை ஏற்கனவே கண்காணித்தபோது, அவர் உடலுறவு மேற்கொண்டதற்கு அல்லது பலாத்காரம் எதிர்கொண்டதற்கு தடயம் இல்லை. இதனால் மகளின் உடல்நலக்குறைவால் வயிற்று அவ்வாறு என எண்ணி இருக்கிறார். இதனிடையே தான் அவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனால் மகளிடம் விசாரித்தபோது, அவர் தான் காதலருடன் வாய்வழி உறவு 9 மாதங்களுக்கு முன் வைத்துக்கொண்டேன். வேறேதும் செய்யவில்லை என கூறி இருக்கிறார். Oscars Academy Awards 2025: ஆஸ்கர்ஸ் விருதுகள் 2025: எப்போது? நேரலை பார்ப்பது எப்படி? முழு விபரம் இதோ.!
அரிதினும் அரிதான வழக்கு:
இதனால் அதிர்ந்துபோன மருத்துவக்குழு, இவ்வாறான பிரசவத்திற்கு வாய்ப்பே இல்லை என கூறி ஆராய்ச்சி செய்துள்ளது. அப்போது, மிகவும் அரிதினும் அரிதான விளைவாக சிறுமி கருத்தரித்து இருக்கலாம் எனவும், அவர் வாய்வழி உடலுறவு காரணமாக விந்தணுவை விழுங்கி, அது வயிற்றுக்குள் சென்று எவ்வித உபாதையையும் எதிர்கொள்ளாமல், நேரடியாக கருமுட்டையுடன் இணைந்து இருக்கலாம் எனவும் கூறுகின்றனர். பல்வேறு ஆய்வுகள் வாய்வழி உறவால் கர்ப்பம் தரிக்க முடியாது என முடிவை கூறினாலும், இது அரிதான நிகழ்வு என மருத்துவர்கள் கூறுகின்றனர். கடந்த 1998ம் ஆண்டு இந்த விஷயம் நடந்த நிலையில், தற்போது மருத்துவ வல்லுநர்களால் விஷயம் வெளியே தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமிக்கு அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை எடுத்து டிஎன்ஏ பரிசோதனை செய்தபோது, அக்குழந்தையின் பெற்றோருக்கு எடுக்கப்பட்ட டிஎன்ஏ சோதனையில் அனைத்தும் உறுதி செய்யப்பட்டுள்ளது. Zelensky US Visit: போருக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்ட அமெரிக்கா.. அடம்பிடித்த உக்ரைன் அதிபர்.. வந்தவழியே ஆவேசத்துடன் புறப்பாடு.!