ஜூலை 08, அமெரிக்கா (World News): அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் பகுதியில் நேற்று இரவு லாரி மற்றும் கார் மோதிய விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பமே தீயில் கருகி உயிரிழந்த சோகம் நடந்துள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத்தை பூர்வீகமாகக் கொண்ட தம்பதி ஸ்ரீ வெங்கட் - தேஜஸ்வினி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். தற்போது இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழ்ந்து வருகிறார்கள். இந்நிலையில் இவர்களின் குடும்பம் அங்குள்ள அட்லாண்டாவில் இருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு பின் காரில் டல்லாஸ் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். பள்ளி மாணவிகள் குழந்தை பெற்றால் ரூ.1 லட்சம்.. அரசின் அறிவிப்பு.!
கார் விபத்தில் குடும்பமே பலி :
அப்போது அவ்வழியாக வந்த லாரி மோதி ஏற்பட்ட விபத்தில் கார் தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் காரில் இருந்து வெளியே வர முடியாத நால்வரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விஷயம் குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர்களது உடலை தாயகம் அழைத்து வரவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.