நவம்பர் 20, காசா (World News): அக்டோபர் 07ம் தேதி இஸ்ரேல் நாட்டை எதிர்த்து பாலஸ்தீனியத்தைச் சேர்ந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் திடீர் போர் அறிவிப்பை வெளியிட்டு தாக்குதலை முன்னெடுத்தனர். இந்த தாக்குதலில் இஸ்ரேலின் சார்பில் முதலில் 1400 பேர் ஹமாஸ் பயங்கரவாதிகளால் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, பதிலடி கொடுத்து வரும் இஸ்ரேலின் நடவடிக்கை ஒரு மாதத்தை கடந்தும் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இதனால் பாலஸ்தீனிய மக்கள் பெரும் அழிவை சந்தித்துள்ள நிலையில், அவர்களின் காசா நகரம் பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது.

இந்நிலையில், தற்போது வரை நடந்த தாக்குதலில் பாலஸ்தீனியத்தைச் சார்ந்த 5,500 குழந்தைகள், 3,500 பெண்கள் என மொத்தமாக 13 ஆயிரம் பேர் (Israel Hamas War Death Toll) உயிரிழந்துள்ளதாகவும், 30 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. Minor Girl Slipped Sambar Vessel: பள்ளிக்கூட சமயலறையில் பயங்கரம்: சாம்பார் அண்டாவில் தவறி விழுந்த 8 வயது சிறுமி பரிதாப பலி.! 

அதேபோல, 6 ஆயிரம் பேர் தற்போது வரை மாயமாகியுள்ளதாகவும், இவர்களில் 4000 குழந்தைகள் மற்றும் பெண்கள் அடங்குவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் பயங்கரவாதிகளால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகளை மீட்கும் பணியில் இஸ்ரேல் ராணுவம் களமிறங்கி உள்ளது. மேலும், அங்குள்ள பல நிலத்தடி சுரங்கங்களில் தொடர் தேடுதல் வேட்டையில் நடந்து வருகிறது.

போரில் தங்களின் உறவினர்கள், குடும்பத்தினரை இழந்தவர்கள் பாதுகாப்பு முகாம்களில் கண்ணீர் வடித்தவண்ணம் தங்களின் வேதனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். ஹமாஸின் தவறான முடிவால், இன்று அவர்களால் பாதுகாப்பு பெறவேண்டிய மக்கள் கூட்டம் கூட்டமாக பலியாகி வருகின்றனர்.