ஜனவரி 27, வாஷிங்க்டன் டிசி (World News): அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றியடைந்த டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump), 47 வது அமெரிக்க அதிபராக நேற்று முன்தினம் பதவியேற்றார். 45வது அதிபராக பணியாற்றியவர், 46 வது அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், 47வது அதிபர் தேர்தலில் களம்கண்டு வெற்றியடைந்து, மீண்டும் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்டார். அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபராக பொறுப்பேற்றுக்கொண்ட ட்ரம்ப், அமெரிக்காவை மீண்டும் முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்வேன் என வாக்குறுதி அளித்து இருக்கிறார்.
புதிய திட்டங்களின் அறிவிப்பு:
இதனிடையே, அமெரிக்க அரசு நிர்வாகத்தால் முடக்கப்பட்ட டிக் டாக் மீதான தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றமும் உறுதி செய்த நிலையில், ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின்னர் டிக் டாக் செயலிக்கு புதிய நிபந்தனையுடன் வாய்ப்பு ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அதாவது, டிக் டாக் செயலியை அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் வாங்க வேண்டும் என நிபந்தனை கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அமெரிக்க அரசு ஆண், பெண் என்ற இரண்டு பாலினங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என அறிவித்துள்ளார். மெக்சிகோ வளைகுடாவை (Gulf of Mexico) அமெரிக்க வளைகுடா (Gulf of America) எனப் பெயர் மாற்றியுள்ளார். அலாஸ்காவின் 2000 அடி மலைக்கு, 2015ம் ஆண்டு அதிபர் ஒபாமா டெனலி மலை என பெயர் சூடிய நிலையில் மெக்கென்லி மலை என்ற பழைய பெயரையே மீண்டும் சூட்டியுள்ளார். மேலும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். Kuch Kuch Hota Hai: ஷாருக்கானின் பாடலை பாடி மகிழ்ந்த இந்தோனேஷிய அமைச்சரவை குழு; இந்திய பயணத்தில் சுவாரஷ்யம்.!
குடியுரிமை ரத்து:
ஒரு குழந்தை அயல் நாட்டில் பிறந்தால் அதன் தாய் - தந்தை அந்த நாட்டு குடிமகனாக இல்லை என்றாலும் என்றாலும் அந்த குழந்தை அந்த நாட்டு குடிமகனாக மாறும். உலகம் முழுக்க பல நாடுகளில் இந்த முறை உள்ளது. இச்சட்டம் (US birthright citizenship) அமெரிக்காவிலும் 1868ம் ஆண்டு முதல் அமலில் இருந்த நிலையில், பிறப்புரிமை அடிப்படையில் இனி தானாக அமெரிக்க குடியுரிமையை கோரமுடியாது என டொனால்டு டிரம்ப் அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது, சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எச்1பி விசா போன்ற சட்டப்பூர்வ குடியேற்றம் கொண்டவர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. இது, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மிகப்பெரிய மாற்றமாக பார்க்கப்படுகிறது.
சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைத்தனர். இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதேபோல், அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியாவும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தினார். ஒரு வாரத்தில் இதனை 50% வரை உயர்த்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.