Joe Biden Visits India (Photo Credit: Twitter)

செப்டம்பர் 8, வாஷிங்டன் (World News): கடந்த திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் (Joe Biden) மனைவி ஜில் பைடனுக்கு (Jill Biden) கொரோனா (Covid 19) தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. அதைத்தொடர்ந்து ஜோ பைடனுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பதை வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. ஜில் பைடன் டெலவெயரில் இருக்கும் தனது வீட்டில்  தனிமைப்படுத்தப்பட்டார்.

அதனால் ஜோ பைடன் ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வாரா? என்ற சந்தேகம் நீடித்தது. இந்நிலையில் நேற்று அவர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்தியா புறப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் இந்தியா புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக அவருக்கு கோவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, அதன் முடிவுகள் ‘நெகட்டிவ்’ -ஆக இருக்கிறது  என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருக்கிறது. Astor Blackstorm Edition: எம்ஜி மோட்டார்ஸ் எஸ்யூவி ஆஸ்டரின் பிளாக்ஸ்டார்ம் எடிஷன் விற்பனைக்கு அறிமுகம்: ஸ்டைலிஷான பிளாக் தீமில்.!

அவர் இன்று மாலை டெல்லியில் (New Delhi) தரையிறங்குவார் என்றும், இன்று இரவே பிரதமர் மோடியை தனிப்பட்ட முறையில் சந்திப்பார் என்றும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ஜோ பைடன், வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்தும், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் எனபல முக்கிய பிரச்சனைகள் குறித்தும் விவாதிப்பார் என்று  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஜி-20 மாநாடு முழுவதிலும் ஜோ பைடன் கோவிட் விதிமுறைகளை (COVID Protocols) கடைப்பிடிப்பார் என்றும், மற்ற தலைவர்களுடனான  அவரது சந்திப்பும் கோவிட் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகவே இருக்கும் என்று வெள்ளை மாளிகை தெரிவித்து இருக்கிறது.