நவம்பர் 08, வாஷிங்டன் (World News): அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பதவிக்காலம் 2025ம் ஆண்டு ஜனவரி மாதத்துடன் நிறைவடையவுள்ள நிலையில், அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் (US Presidental Election 2024) வாக்குப்பதிவு நவம்பர் 5 அமெரிக்காவில் நடைபெற்றது. அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் முதலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்ட ஜோ பைடன் (Joe Biden), பல்வேறு காரணங்களால் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, இந்திய வம்சாவளி அமெரிக்கரான கமலா ஹாரிஸ் (Kamala Harris) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அதேநேரத்தில், அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே என்ற முழக்கத்துடன் கடந்த தேர்தலில் களமிறங்கி வெற்றியடைந்த, குடியரசுக் கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (Donald Trump) போட்டியிட்டார்.
எலக்ட்ரல் வாக்குகள்: அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை வைத்து நேரடியாக வெற்றியாளரை தேர்வு செய்ய மாட்டார்கள். மாறாக எலக்ட்ரல் வாக்குகள் பயன்படுத்தப்படும். அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளன. இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரதிநிதிகள் எண்ணிக்கையை பொறுத்தே எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். Social Media Ban: 16 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. என்ன காரணம் தெரியுமா..?
உதாரணமாக டெக்ஸாஸ் மாகாணத்தில் யாருக்கும் அதிகமான மக்கள் வாக்கு கிடைக்கிறதோ, அவர்களுக்கே அங்கு இருக்கும் 38 எலக்ட்ரல் வாக்குகளும் அப்படியே வழங்கப்படும். அதாவது ஒரு மாகாணத்தில் மெஜாரிட்டி வாக்குகளை பெறும் வேட்பாளர் அந்த மாகாணத்தின் மொத்த எலக்ட்ரல் வாக்குகளையும் பெறுவார். இதன் காரணமாக தேசிய அளவில் குறைவான மக்கள் வாக்குகளை பெற்ற வேட்பாளர்கள் கூட, வெற்றிபெற முடியும். அதாவது மெஜாரிட்டி மாகாணங்களில் எலக்ட்ரல் வாக்குகளை அள்ளினால் போதும்.
அமெரிக்க அதிபர் தேர்தல்: அமெரிக்க அதிபர் தேர்தல் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றை பதிவு செய்ய உள்ளார் அதிபர் வேட்பாளர் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப். தேர்தல் முடிவுகளின்படி டொனால்ட் டிரம்ப் 277 எலக்ட்ரல் வாக்குகளை வெற்றி பெற்றுள்ளார். கமலா ஹாரிஸ் 226 வாக்குகளை வென்றுள்ளார். இதனை பாக்ஸ் நியூஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டிரம்ப் இதன் மூலம் கிட்டத்தட்ட 300 மாகாணங்களை வென்று ஆட்சி அமைத்துள்ளார். தொடர்ந்து அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு தொலைபேசி வாயிலாக ஜோ பைடன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஜோ பைடன் உரை: இதற்கிடையே அதிபர் தேர்தலில் முடிவுகள் வெளியான பிறகு முதல்முறையாக சிட்டிங் அதிபர் பைடன் நாட்டு மக்களிடையே உரையாற்றினார்.அவர் கூறியதாவது, "அதிகார பரிமாற்றம் அமைதியான முறையில் நடைபெறும். ஜனநாயகத்தில் மக்கள் விருப்பமே எப்போதும் மேலோங்கி நிற்கும். கமலா ஹாரிஸ் முடிந்தவரை முயற்சி செய்தார். கமலா ஹாரிஸும் அவரது டீமும் தாங்கள் செய்ததை நினைத்துப் பெருமைப்பட வேண்டும். நேற்றைய தினம் நான் புதிய அதிபராக ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டிரம்ப்பை தொடர்பு கொண்டு பேசினேன். அவருக்கு வாழ்த்து சொன்னேன்" என்றார்.