Canada PM Justin Trudeau (Photo Credit: X)

ஜனவரி 07, ஒட்டாவா (World News): கனடாவில் நிலவும் உள்நாட்டு அரசியல் சிக்கல்களால், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (PM Justin Trudeau) பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த 2025ஆம் ஆண்டு அக்டோபரில் கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே அவர் பதவி விலகியுள்ளார்.

கடும் எதிர்ப்பு:

லிபரல் கட்சிக்குள் (Liberal Party) பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், பல முனைகளில் இருந்தும் நெருக்கடி அதிகரித்தது. சர்வதேச அரங்கில் நெருக்கடிகளைச் சந்தித்து வரும் ட்ரூடோ, உள்நாட்டு அரசியலிலும் சிக்கல்களை எதிர்கொண்டு வந்தார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துதில் இருந்து ட்ரூடோவுக்கு நெருக்கடி அதிகரித்துவிட்டது. ட்ரூடோவின் லிபரல் கட்சியின் முக்கிய கூட்டணிக் கட்சியான தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவர் ஜக்மீத் சிங், மக்களுக்கு பணியாற்றுவதில் ட்ரூடோ தோல்வியுற்றதாகவும், அவரது அரசு மீது வரும் ஜனவரி மாதம் 27ஆம் தேதி நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதனால் அவருக்கு மிகக் கடுமையான நெருக்கடி ஏற்பட்டது. Job Alert: ஐக்கிய அமீரகத்தில் பல்வேறு வேலைவாய்ப்புகள்; அயலகத் தமிழர் நலத்துறை அறிவிப்பு.. விபரம் உள்ளே.!

பதவி விலகல்:

அதேபோல், கடந்த டிசம்பரில் ட்ரூடோவின் அமைச்சரவையில் இருந்து ஒரு துணை பிரதமரும், நிதியமைச்சர் கிறிஸ்டியா ஃப்ரீலாண்ட் ராஜினாமா செய்தார். இதனையடுத்து, அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத் தொடங்கியது. இதனால் கனடாவில் எதிர்பார்க்கப்பட்டபடியே, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்தார்.