China Earthquake (Photo Credit: @Independent X)

டிசம்பர் 19, பெய்ஜிங் (Beijing): சீனாவின் (China) வடமேற்கு கன்சு மாகாணத்தில் அதிசக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 6.2 அலகுகளாகப் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் உடைந்து 115 பேர் இறந்தனர். மேலும் நூற்றுக்கணக்கான நபர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சுமார் 230க்கும் மேற்பட்டோர் காணாமல் போய் உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. தற்போது இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. IPL 2024 auction: ஐ.பி.எல் ஏலம் நடத்தும் முதல் பெண்! யார் இந்த மல்லிகா சாகர்?.!