Sunita Williams (Photo Credit: @kronatom X)

மார்ச் 10, லண்டன் (World News): இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா (NASA) விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் (Sunita Williams) மற்றும் புட்ச் வில்மோர் (Butch Wilmore) ஆகிய இருவரும் விண்வெளி ஆய்வுக்காக கடந்த 2024ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு சென்றனர். போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் இருவரும் 8 நாள் பயணமாக விண்வெளி மையத்துக்கு சென்ற நிலையில் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கிக் கொண்டனர். தற்போது 9 மாதங்களை எட்டியுள்ள நிலையில், அவர்களை பூமிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. US President Warning: உக்ரைன், ரஷிய நாடுகளுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.. போரை நிறுத்தி பேச்சுவார்த்தையை தொடங்க அமெரிக்கா அறிவுறுத்தல்.!

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்:

இந்நிலையில், வரும் மார்ச் 16ஆம் தேதி ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் விண்கலத்தில் பூமிக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று நாசா அறிவித்துள்ளது. சுனிதாவும், வில்மோரும் விண்வெளி நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள ஸ்பேஸ் எக்ஸ் க்ரூ -9 மிஷன் விண்கலத்தில் பூமிக்குத் திரும்புவார்கள். இந்த விண்கலம் செப்டம்பரில் விண்வெளி நிலையத்தை அடைந்தது. நாசா விண்வெளி வீரர் நிக் ஹேக் மற்றும் ரஷ்யாவின் அலெக்ஸாண்ட்ரா கோர்புனோவ் ஆகியோரும் சுனிதாவுடன் பூமிக்கு திரும்பும் பயணத்தில் உடன் வருவார்கள். ஆரம்பத்தில் அவர்கள் பிப்ரவரியில் திரும்ப திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், தற்போது மார்ச் 16ஆம் தேதி அன்று, நால்வரும் ஒன்றாகத் திரும்புவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.