மார்ச் 08, வாஷிங்டன் டிசி (World News): நேட்டோ படைகளுடன் இணையும் உக்ரைன் நாட்டின் முடிவை எதிர்த்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின்பேரில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது படையெடுத்து சென்றது. 2014 க்கு பின் தொடர்ந்து வந்த வாக்குவாதம், 2022ல் போருக்கு வழிவகை செய்தது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ படையுடன் உக்ரைன் நாட்டை இணைக்கும் முயற்சியில் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறார். முந்தைய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆட்சிக்காலத்தில், அமெரிக்கா உக்ரைனுக்கு நேரடி நிதி, இராணுவ தளவாடங்கள் வழங்கியது. தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் இராணுவம் மற்றும் நிதி உதவியை முற்றிலுமாக நிறுத்திவிட்டார். Father Blesses Bride: மகளிடம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வண்ணத்துப்பூச்சியாய் வந்த தந்தை; மணக்கோலத்தில் கலங்கிய மணமகள்.! 

தொடரும் உக்ரைன் - ரஷியா போர் (Ukraine Russia War):

இதுதொடர்பாக அமெரிக்காவுக்கு வந்து அதிபருடன் நேரடியாக உக்ரைன் அதிபர் உரையாடவிருந்த நிகழ்ச்சிகள், கருத்து முரண் காரணமாக நிறுத்தப்பட்டது. மேலும், போரை முடிவுக்கு கொண்டு வர திட்டவட்டமாக அமெரிக்கா முயற்சித்து வருவதால், போரை நிறுத்தும் எண்ணம் ஏற்படும்போது உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு வரலாம் என அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விஷயம் சர்வதேச அளவில் விவாதத்தை உண்டாக்கியது. அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட உக்ரைன் அதிபர், நேரடியாக லண்டனுக்கு சென்று இங்கிலாந்து நாட்டின் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை நேரில் சந்தித்தார்.

அமெரிக்க அதிபர் எச்சரிக்கை:

இந்நிலையில், தற்போது ரஷ்ய படைகள் உக்ரைன் எல்லைப்பகுதியில் உள்ள எரிவாயு கூடங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் மீது தாக்குதலை தொடர்ந்து இருக்கிறது. இதனால் போரை முடிவுக்கு கொண்டு வர இரண்டு நாடுகளும் உடனடியாக அமைதி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். இரண்டு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி போரை தொடருவது நல்லதில்லை. போரை தொடர்ந்து நடத்தி வந்தால், கடுமையான பொருளாதார தடைகள் அமல்படுத்தப்படும். உக்ரைன் நாடு பேச்சுவார்த்தைக்கு தாமதிக்காமல் முன்வர வேண்டும். அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து இருக்கிறார்.