Nepal Landslide (Photo Credit: @snehamordani X)

ஜூலை 12, காத்மாண்டு (World News): நேபாளத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, திரிசூலி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகளை சூழ்ந்துள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகளும் (Landslide) ஏற்பட்டு வருகின்றன. மத்திய நேபாளத்தில் அமைந்துள்ள மதன் – ஆஷ்ரித் நெடுஞ்சாலை (Madan-Ashrit) அருகே திடீரென்று ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு பயணிகள் பேருந்து அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. TN Weather Update: இன்றைய மற்றும் நாளைய வானிலை குறித்த அறிவிப்பு.. மீனவர்களுக்கான எச்சரிக்கை.. விபரம் உள்ளே..!

இரண்டு பேருந்துகளிலும் பேருந்து ஓட்டுநர்கள் உட்பட மொத்தம் 63 பேர் பயணம் செய்தனர். இந்நிலையில் இந்த விபத்தில் இந்தியர்கள் 7 பேர் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. தொடர் மழை காரணமாகவும், திரிசூலி ஆற்றின் வலுவான நீரோட்டம் காரணமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் சிக்கல் ஏற்பட்டுவருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.