Nepal PM Sharma Oli Resign (Photo Credit: @ANI / @NepalPM X)

செப்டம்பர் 09, காத்மாண்டு (World News): நேபாள நாட்டில் பேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு தடை விதித்து அந்நாட்டின் அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு எதிராக மாணவர்கள், சமூக வலைதள ஆதரவாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். நேற்று தொடங்கிய இந்தப் போராட்டத்தின்போது, காவல்துறையினர் போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த துப்பாக்கிசூடு நடத்தி இருந்தனர். அப்போது, 20 பேர் வரை கொல்லப்பட்டனர். இதனால் மாணவர்களின் போராட்டம் அரசுக்கு எதிரான வன்முறையாக மாறியது. மேலும், அந்நாடு முழுவதும் கிளர்ச்சி ஏற்பட்டது. ENG Vs SA ODI Series: தொடரை இழந்தாலும் இறுதிப்போட்டியில் இமாலய வெற்றி... இங்கிலாந்து - தென்னாபிரிக்கா ஒருநாள் போட்டியில் 27 ஆண்டுகள் கழித்து இங்கி., சாதனை.! 

நேபாள பிரதமர் ராஜினாமா:

இந்த கிளர்ச்சி 2வது நாளாக இன்றும் தொடருகிறது. மேலும், அரசுக்கு எதிரான போராட்டத்தில், காவல்துறையினர் கற்களால் வீசி எறியப்பட்டு விரட்டியடிக்கப்பட்டனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அந்நாட்டின் உள்துறை அமைச்சர் மரணங்களுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். போராட்டகாரர்களின் உயிரிழப்புக்கு அரசு பொறுப்பேற்பதாக அறிவித்தாலும், போராட்டக்காரர்கள் தங்களின் போராட்டத்தை முன்னெடுத்து இருந்தனர். ஒருகட்டத்தில் நேபாள பிரதமர் ஷர்மா ஒலி துபாய் தப்பிச்செல்ல தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், அந்நாட்டின் பிரதமர் ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்து அறிவித்து இருக்கிறார்.

போராட்டத்துக்கு காரணம் என்ன?

கம்யூனிச கொள்கை அடிப்படிவதியான ஷர்மா ஒலி தலைமையிலான அரசு நேபாளத்தில் அதிக ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தை ஜென் இசட் (Gen Z) குழந்தைகளான தற்போதைய இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் அதிக கேள்விகளை எழுப்பி விவாதங்களை உண்டாக்கி இருக்கின்றனர். இதனால் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த அவற்றின் மீது தடை விதிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டது. இந்த விஷயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் இறுதியில் வன்முறை நிலையை அடைந்து தற்போது கிளர்ச்சியாக நாடு முழுவதும் பரவியுள்ளது.

நேபாள அரசின் ஊழல் ஆட்சிக்கு எதிராக தான் 6 மாதமாக போராடுவதாக ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஏஎன்ஐ நிறுவனத்துக்கு அளித்த பேட்டி: