Tribute in Light, New York City (Photo Credit: Twitter)

செப்டம்பர் 11, நியூயார்க் (World News): 2001 ஆம் ஆண்டு, நியூயார்க் (New York) மாகாணத்தில் இருக்கும் வாஷிங்டன் நகரத்தில் செப்டம்பர் 11 அன்று பயங்கரவாத தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பின்னாளில், இந்த தாக்குதல் 9/11 தாக்குதல் என அறியப்பட்டது. கடந்த 22 ஆண்டுகளுக்கு முன்பாக அமெரிக்காவில் நிகழ்ந்த இந்த பயங்கரவாத தாக்குதலில், 23 காவல்துறை அதிகாரிகள் உட்பட கிட்டத்தட்ட 3000 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகனில் (Pentagon) தீவிரவாதிகள் விமானங்களை மோத விட்டு தாக்குதலை மேற்கொண்டனர். மேலும், உலக வர்த்தக மையத்தின் (World Trade Center) இரட்டை கோபுரங்கள் (Twin Tower) தாக்கப்பட்டு சிதைக்கப்பட்டன. இந்த தாக்குதலில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கானவர்களை நினைவு கூறும் விதமாக நியூயார்க் மாகாணத்தில் அனைத்து இடங்களிலும் பிரகாசமான ஒளி விளக்குகள்  ஏற்றப்பட்டது.

இந்த தாக்குதலின் போது உயிரிழந்தவர்களையும், உயிரைப் பணயம் வைத்து போராடியவர்களையும் நினைவுகூறும் விதமாக நெட்டிசன்கள் இணையத்தளத்தில் இந்த தாக்குதல் சம்பவங்களின் புகைப்படஙகளை பகிர்ந்து தங்களின் இறங்கலையும் வருத்தங்களையும் பதிவு செய்து வருகின்றனர் வருகின்றனர்.

இதுகுறித்து அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் (Joe Biden) தனது அறிக்கையில் “நம் அனைவருடைய வருத்தங்கள் தான் இறந்தவர்களின் ஆன்மாவிற்கு செலுத்தப்படும் அன்பும் மரியாதையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.