Volcano Eruption Indonesia (Photo Credit: @PDChina X)

ஏப்ரல் 18, இந்தோனேசியா (World News): இந்தோனேசியாவில் உள்ள சுலவேசி தீவின் வடக்குப் பகுதியில் உள்ள ருவாங் தீவில் உள்ள எரிமலை, நள்ளிரவில் இருந்து 5 முறை பயங்கரமாக வெடித்து சிதறியுள்ளது. அதில் இருந்து எரிமலை குழம்புகள் வெளியேறி வருகின்றன. மேலும், பல நாட்களாக தொடர்ச்சியாக சாம்பலை வெளியேற்றி வந்து, தற்போது எரிமலை வெடித்து சிதறியுள்ளது. Married Woman Murder: கள்ளக்காதலர்கள் இடையே தகராறு; பெண் மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை..!

இதன்காரணமாக, சுமார் 11 ஆயிரம் வீடுகளில் உள்ள மக்களை, எரிமலை பகுதியில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் தள்ளி இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த எரிமலை வெடிப்பு 2,378 அடி உயரமுள்ளது ஆகும். இதில் ஆயிரக்கணக்கான அடி உயரத்திற்கு சாம்பல் படிந்துள்ளது. இதனால், எரிமலையின் ஒரு பகுதி கடலில் சரிந்து சுனாமி (Tsunami Alert) வர வழிவகுக்கும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கடந்த சில மாதங்களில் தொடர்ந்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக தற்போது ருவாங் எரிமலை வெடிப்பு நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரையும் மனடோ நகருக்கு பத்திரமாக கொண்டு செல்ல ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. இதேபோல், 2018-ஆம் ஆண்டு நடந்த எரிமலை வெடிப்பில், கடலில் சரிந்து விழுந்து அதில் சுமார் 430 பேர் பலியான சம்பவம் நினைவுபடுத்தப்படுகிறது.