மே 17, இஸ்லாமாபாத் (Pakistan News): பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தனது ஆட்சியை இழந்த பின்னர் பெரும் சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக (மே 9, 2023) அன்று வழக்கு விசாரணைக்காக நீதிமன்றம் வந்த இம்ரான் கான், உளவுத்துறை பாதுகாப்பு படையினரால் திரைப்பட பாணியில் நீதிமன்ற வளாகத்திற்குள் கைது செய்யப்பட்டார்.
அவரின் கைதுக்கு பின்னர் பாகிஸ்தானில் கலவரம், வன்முறை, போராட்டம் போன்றவை தொடர்ந்து நடந்தது. இந்த வன்முறை சம்பவத்தில் காவல் துறையினர், அப்பாவி பொதுமக்கள், இராணுவத்தினர் என 10 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இராணுவத்தின் தாக்குதலால் 40 தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் இறந்ததாகவும் பி.டி.ஐ சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டன. Black Kites Stuck in PM Modi’s Office: வெப்பத்தின் தாக்கத்தால் பிரதமர் அலுவலகத்தில் சுருண்டு விழுந்த பருந்துகள்; உயிர்கொடுத்த அதிகாரிகள்.!
இந்த நிலையில், லாகூரில் செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அமீர் மீர், "எங்களிடம் சந்தேகத்திற்கு இடமான பயங்கரவாதிகளை பி.டி.ஐ ஒப்படைக்க வேண்டும். 24 மணிநேரம் அதற்கான கெடு தரப்படுகிறது. இதற்கு பி.டி.ஐ ஒத்துழைக்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பயங்கரவாதிகள் ஜமான் பூங்காவில் இருக்கும் இம்ரான் கானின் இல்லத்தில் இருக்கிறார்கள். இதனை உறுதிப்படுத்தும் உளவுத்துறை அறிக்கை அரசிடம் உள்ளது. சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள் கவலையை அளிக்கின்றன. செயற்கைகோள் சமிக்கைகளும் சரிபார்க்கப்பட்டுள்ளன" என பேசினார்.
இம்ரான் கானுக்கு நீதிமன்றம் மே 31 வரை கைது செய்ய தடை வழங்கியுள்ள நிலையில், பி.டி.ஐ தரப்பிலும் அரசுக்கு எதிரான போர்க்கொடி விவகாரத்தால் பாகிஸ்தானில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. எதிர்வரும் நாட்களில் பாகிஸ்தானில் நடக்கப்போகும் விஷயங்களை உலக நாடுகளும் கவனித்துக்கொண்டு இருக்கின்றன.