ஜனவரி 23, இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் (Pakistan) நாட்டில் பெரும்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளதால் காரணமாக, மக்கள் பல இன்னல்களை அனுபவிக்க தொடங்கியுள்ளனர். அந்நாட்டில் உள்ள பல நகரங்களில் (No Electricity) மின்சாரம் இல்லாமல், அதுசார்ந்த பிரச்சனையை மக்கள் எதிர்கொண்டுள்ளனர்.
மின்வியோகத்தை சீர் செய்யவும், மின்சார பிரச்சனை தொடர்பான கோளாறை சரி செய்யவும் அங்குள்ள K-Electric அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள முக்கிய நகரமான இஸ்லாமாபாத், லாகூர் மற்றும் கராச்சியில் (Islamabad, Lahore & Karachi) மின்சாரம் இல்லை. இன்று காலை 07:30 மணிக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. China Amusement Park: பெண்டுலம் ரைடு சென்றவர்களுக்கு உயிர் பயத்தை காண்பித்த பயங்கரம்.. அதிக எடையால் சம்பவம்.. மரண பயத்தை காமிச்சிட்டாங்க பரமா..!
அங்குள்ள குட்டூவில் இருந்து குவெட்டா நகருக்கு செல்லும் மின்வழித்தடத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பலுசிஸ்தான் மாகாணத்தில் இருக்கும் 22 மாவட்டத்திலும் மின்சாரம் இல்லை. மின்தடையை விரைந்து சரிசெய்ய அதிகாரிகள் கவனம் செலுத்தியுள்ளனர். மின்வெட்டால் 220 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டினை பொறுத்தமட்டில் அந்நிய செலாவணி பிரச்சனை தலைதூக்கி, பொருளாதாரத்தை நிலைக்க வைக்க அந்நாடு போராடி வருகிறது. கடந்த 2022ல் அக்டோபர் மாதமும் இதனைப்போன்றதொரு மெகா மின்வெட்டு பாகிஸ்தானில் ஏற்பட்டு லாகூர், கராச்சி உட்பட பல பகுதிகள் 12 மணிநேரத்திற்கு மேலாக மின்சார பிரச்சனையை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.