Imran Khan (Photo Credit: Facebook)

ஆகஸ்ட் 09, பாகிஸ்தான் (Pakistan News): பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் இம்ரான் கான் (Imran Khan). இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். கடந்த 2018 முதல் 2022 வரை என நான்காண்டுகள் பாகிஸ்தானின் பிரதமராகவும் பதவி வகித்து வந்தார். இறுதியில் எதிர்க்கட்சிகளின் சூழ்நிலையால் அவரது ஆட்சி அகற்றப்பட்டு. இன்று பாகிஸ்தான் பிரதமராக ஷானபாஸ் ஷெரிப் பதவி வகித்து வருகிறார். 

இந்நிலையில், பாகிஸ்தானில் பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டனர். கோதுமைக்காக அடித்துக்கொண்டு சூழலும் நடந்தது. இம்ரான் கான் ஆட்சி பறிக்கப்பட்ட காரணத்தால், பல இடங்களில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்தினார்.

ஆட்சியாளர்களுக்கு எதிராக பல புகார்களை அடுக்கடுக்காக முன்வைத்த நிலையில், அது தொடர்பான வழக்கில் சிக்கி நீதிமன்றத்தில் வைத்து அதிரடிப்படையால் திரைப்பட பாணியில் கைதும் செய்யப்பட்டார்.

இதனால் ஒருசில இடங்களில் வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன. இதனிடையே தற்போது பாகிஸ்தான் நாட்டின் தேர்தல் கமிஷன் ஐந்து ஆண்டுகள் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட தடை விதித்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் சட்டப்படி குற்றவாளி என நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டவர் நபர் ஐந்தாண்டுகள் தேர்தலில் எவ்வித போட்டியில் ஈடுபட முடியாது. அவர் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.

இதன்பேரில் இம்ரான் கான் 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெறுவதற்கு தண்டனை விதிக்கப்பட்டது. சிறை தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தாலும், சட்ட ரீதியான போராட்டங்கள் அங்கு தொடர்ந்து வருகிறது. பரிசு வாங்க அரசு பணம் 140 மில்லியனை செலவழித்ததாக புகார் எழுந்த விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டு உறுதியாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இம்ரான் கானுக்கு 70 வயது என்பது குறிப்பிடத்தக்கது.