Pakistan Election (Photo Credit: @ANI X)

பிப்ரவரி 08, இஸ்லாமாபாத் (Pakistan News): பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலுக்கான (Pakistan parliamentary election) வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. இந்த தேர்தலில் பல்வேறு வழக்குகளில் சிறையில் இருக்கும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி, பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோ தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீபின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ் கட்சி இடையே போட்டி நிலவுகிறது. Bigg Boss Contestant Receives Abusive Message: பிரபல தமிழ் பிக்பாஸ் நடிகைக்கு பாலியல் தொல்லை.. இருவர் கைது..!

இத்தேர்தலுக்காக 65,000க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பை கருத்தில் கொண்டு பாகிஸ்தான் முழுவதும் இன்று இணைய சேவை தற்காலிகமாக துண்டிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் நேற்று பாகிஸ்தான் நாட்டின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பிசின் மற்றும் கிலா ஃசைபுல்லா ஆகிய நகரில் இரட்டை குண்டு வெடிப்பு (Two bomb explosions) நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.