Papua New Guinea Landslide (Photo Credit: @BNONews X)

மே 24, போர்ட் மோர்ஸ்பி (World News): ஓசியானியாவில் உள்ள பப்புவா நியூ கினியா (Papua New Guinea) நாட்டில், நேற்று ரிக்டர் அளவுகோலில் 5.3 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது அங்குள்ள பல நகரங்களை உலுக்கிய நிலையில், தலைநகர் போர்ட் மோர்ஸ்பியில் இருந்து 600 கிமீ தொலைவில் இருக்கும் இன்கா மாகாணம், கவோகலாம் கிராமத்தில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. NMC Approves 6 Medical Colleges in TN: தமிழ்நாட்டில் 6 புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைக்க மத்திய சுகாதாரத்துறை ஒப்புதல்; அதிரடி உத்தரவு.! 

மண்ணோடு மண்ணாகி நடந்த சோகம்: இந்த நிலச்சரிவினால் அங்குள்ள குடியிருப்புகள் பலவும் மண்ணில் புதைந்துள்ளன. பல கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன. இதனால் குடியிருப்புகளில் இருந்த 100 க்கும் மேற்பட்டோர் பலியானதாக சந்தேகிக்கப்பட்டு, அவர்களின் உடலை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு குழுவினருடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். மலைப்பகுதியை ஒட்டியிருந்த குடியிருப்புகள் அப்படியே மலையின் மீது இருந்த மரங்கள், கற்களால் மூடப்பட்டு குடியிருப்புகள் மண்ணோடு புதைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விஷயம் குறித்து மேற்படி விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

நிலச்சரிவின் சேதங்கள் குறித்த காட்சிகள்:

நிலச்சரிவு சேதத்தின் நேரடி காட்சிகள்: