ஆகஸ்ட் 23, ஜோகனஸ்பர்க் (World News) : தென் ஆப்பிரிக்காவுக்கு (South Africa) மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி பதினைந்தாவது பிரிக்ஸ் (BRICS Summit 2023) மாநாட்டில் பங்கேற்கிறார். தென் அப்பிரிக்காவிலுள்ள வாட்டர்க்லூப் (Waterkloof) விமான படைத்தளத்தில் பிரதமர் மோடி தரை இறங்கியவுடன் அவரை தென் ஆப்பிரிக்கா துணை அதிபர் நேரில் சென்று வரவேற்றார்.
பொருளாதார ரீதியாக முன்னேறி வரும் நாடுகளை இணைக்கும் விதமாக 2010 ஆம் ஆண்டில் பிரிக்ஸ் அமைப்பு தொடங்கப்பட்டது. பிரேசில் (Brazil), ரஷ்யா (Russia), இந்தியா (India), சீனா (China), மற்றும் தென் ஆப்பிரிக்கா (South Africa) இந்த அமைப்பின் நிரந்தர உறுப்பினர்கள் ஆவர். கொரோனா பரவலைத் தொடர்ந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பிரிக்ஸ் மாநாடு ஆன்லைன் வாயிலாக நடைபெற்றது. இந்த நிலையில் தலைவர்கள் நேரடியாக சந்தித்துக்கொள்ளும் இந்த மாநாட்டை தென் ஆப்பிரிக்கா தலைமையேற்று நடத்துகிறது. Avoid Cyber Crime Tips: ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கும் அசத்தல் வழிமுறைகள் தெரியுமா?.. எளிய ஆலோசனைகளில் சேமிக்கப்படும் உங்கள் பணம்..! விபரம் இதோ.!
பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கு இடையேயான பொது நாணயம் மற்றும் வர்த்தகம் குறித்த விஷயங்கள் விவாதிக்கப்பட இருக்கிறது. அத்துடன் பிரிக்ஸ் அமைப்பில் மற்றும் சில நாடுகளை இணைப்பது தொடர்பான ஆலோசனை நடத்தப்பட உள்ளது. பிரிக்ஸ் அமைப்பில் மற்ற நாடுகளை இணைப்பதற்கு இந்தியாவும் சீனாவும் ஏற்கனவே ஆதரவு தெரிவித்திருக்கும் நிலையில் இந்த அமைப்பில் இணைவதற்கு 23 நாடுகள் விண்ணப்பம் அளித்திருக்கிறது.
‘பிரிக்ஸ் பிளஸ் உரையாடல்’ மற்றும் ‘பிரிக்ஸ் - ஆப்பிரிக்கா அவுட்ரீச்’ நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சியில் பிரிக்ஸ் அமைப்பில் இடம்பெறாத நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.