Donald Tusk (Photo Credit: Wikipedia)

டிசம்பர் 13, போலந்து (Poland): போலாந்து நாட்டில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி பொது தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் மத்திய வாத கட்சித் தலைவர் டொனால்ட் டஸ்க்கின் தலைமையில் அரசு அமைக்க வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்களில் சிலர் ஒன்று சேர்ந்து முடிவு எடுத்தனர்.

அதனைத் தொடர்ந்து அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நேற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் டஸ்க் தலைமையிலான அரசுக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து அவர் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். Child Died After Falling From The Floor : 8வது மாடியிலிருந்து விழுந்த 3 வயது குழந்தை பரிதாப பலி... கதறி அழுத தாய்..! பெற்றோர்களே கவனம்.!!

இதன் மூலம் போலந்து நாட்டின் சட்டம் மற்றும் நீதி கட்சியின் 8 வருட ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. மேலும் போலந்து அதிபர் மாளிகையில் இன்று பதவி ஏற்பு விழா நடந்தது. அதில் டொனால்ட் டஸ்க் பதவி பிரமாணம் செய்தார். அவருடன் சேர்ந்து சில அமைச்சர்களும் பதவி ஏற்று கொண்டனர்.